கொரோனாவை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் 30 கோடி நன்கொடை!!

ஆசிரியர் - Editor II
கொரோனாவை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் 30 கோடி நன்கொடை!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க் கொரோனாவை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

மத்திய அரசு, மற்றும் மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றால் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்த பணம் நன்கொடையாக வழங்கபடுகிறது எனத் தெரிவித்துள்ளது


Radio