தடுப்பூசி போட்டுக்கொண்ட கோலி!!

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போட்டுக்கொண்ட கோலி!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இன்று திங்கட்கிழமை தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளார். 

தடுப்பூசி போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விராட் கோலி, அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, அவரது மனைவி பிரதிமா சிங் ஆகியோரும் இன்று திங்கட்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கடந்த வாரம் உமேஸ் யாதவ், அஜிங்கியா ரகானே, சிகர் தவான் ஆகியோரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Radio