யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! உடுப்பிட்டியை சேர்ந்த 88 வயதான முதியவர்..

யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 88 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்.உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 88 வயதான ஆண் எனவும் அவருக்கு உயிரிழப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் 22வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.