யாழ்.மாவட்டத்தில் முக கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளை மீறுவோரை கண்காணிக்க தீவிர நடவடிக்கை..! பொதுமக்கள் அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் முக கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளை மீறுவோரை கண்காணிக்க தீவிர நடவடிக்கை..! பொதுமக்கள் அவதானம்..

வலிகாமத்தில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

இதற்காக வட்டுக்கோட்டை, மானிப்பாய் மற்றும் இளவாலை பொலிஸார் நாளை திங்கட்கிழமை முதல் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி முதல் பொலிஸார் தத்தமது பிரிவுகளில் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை பணியாளர்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, முகக்கவசம் அணியாதவர்கள் உட்பட கொரோனா கட்டுப்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பலர் எச்சரிக்கப்பட்டனர்.

எனினும், நாளை திங்கட்கிழமை முதல் முகக்கவசம் இல்லாமல் வீதிகளில் நடமாடுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா வேகமாக பரவுவதுடன் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அதிக பங்களிப்பை வழங்கவேண்டும் என சுகாதாரப் பிரிவும் பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு