கொரோனா நீங்க சம்மாந்துறை நகர் பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

ஆசிரியர் - Editor III
கொரோனா நீங்க சம்மாந்துறை நகர் பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா  நோய்த் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியும்  உலகிலிருந்து கொரோனா நோய்த் தொற்றை இல்லாதொழிக்க வேண்டியும் சனிக்கிழமை(8) மாலை நாடு பூராகவும் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றது.

இதற்கமைவாக சுகாதார நடைமுறைகைளைப் பின்பற்றி சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசலில் சூரத்துல் பாத்திஹா ஓதுதல், யாஸீன் ஓதுதல், விசேட துஆ பிரார்த்தனை என்பன சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.தாசீம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விஷேட துஆ பிராத்தனையினை சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.ஏ.எம்.ஜாபிர் நிகழ்த்தினார்.

தற்போது உலகை உலுக்கிவரும் கொவிட் 19 தொற்றுப் பரம்பல் நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மையும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் வேண்டி சர்வமதப் பிரார்த்தனைகள் மாவட்டத்திலுள்ள பிரசித்திவாய்ந்த பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதஸ்தலங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு