கடல்வழியாக 235 கிலோ கேரள கஞ்சாவுடன் இலங்கைக்குள் நுழைந்த 7 இந்தியர்கள் கைது..! கடற்படை அதிரடி..

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக 235 கிலோ கேரள கஞ்சாவுடன் இலங்கைக்குள் நுழைந்த 7 இந்தியர்கள் கைது..! கடற்படை அதிரடி..

சுமார் 235 கிலோ கேரள கஞ்சாவுடன் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த 7 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

புத்தளம் - கற்பிட்டிக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் வைத்து 235 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த இந்திய பிரஜைகள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தொிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவிவரும் நிலையில் 

அங்கிருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்குள் இந்திய பிரஜைகள் ஊடுருவும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில் கடலோர பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு