ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!!

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!!

ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐ.பி.எல். போட்டியின் மிகுதி ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அர்ஜூன டி.செல்வா கூறியதாவது:-

எங்களால் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடியும். இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்த மைதானங்கள் தயாராகிறது.

ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கையை புறக்கணிக்க முடியாது என்றார். 

கடந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தது. இருப்பினும்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Radio