ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்!! -கடந்த 5 ஆண்டுகளில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor II
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்!! -கடந்த 5 ஆண்டுகளில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு-

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 1600 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 சதவீதம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2016ம் ஆண்டுக்கும் 2020ம் ஆண்டுக்கும் இடையே பொதுமக்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆயிரத்து 977 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஆயிரத்து 600 பேர் குழந்தைகள் எனவும் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு   தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகள் வரை கொல்லப்படுவதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு