தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார்!!
தமிழகத்தின் 23 ஆவது முதலமைசை;சராக மு.க ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... எனக்கூறி மு.க ஸ்டாலின்பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மு.க ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.