யாழ்.மாநகர காவல்படையில் இணைக்கப்பட்ட ஊழியர்களை 4ம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர காவல்படையில் இணைக்கப்பட்ட ஊழியர்களை 4ம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பு..

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையில் இடம்பெற்றிருந்த 5 ஊழியர்களையும் வாக்குமூலம் வழங்க வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைத்துள்ளனர். 

கொழும்பு 4ம் மாடியில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்கு எதிர்வரும் 11ம் திகதி காலை 9 மணிக்கு சமூகமளிக்கும்படி அந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனினால் குறித்த காவல்படை உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் காவல்துறை சீருடையை

ஒத்ததான சீருடையை அவர்கள் அணிந்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்படையில் இணைப்பட்ட ஊழியர்கள்

விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு