மோட்டார் சைக்கிளை வழிமறித்து தீயிட்டு கொழுத்திய கும்பல்..! யாழ்.பருத்துறை - சிறிலங்கா பாடசாலை முன் சம்பவம்..

யாழ்.பருத்துறையில் வீதியால் சென்றவர்களை வழிமறித்த கும்பல் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொழுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.
நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சிறிலங்கா பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் நிறுத்திய நிலையில் வழிமறித்த கும்பல் தாக்குதல் நடத்த முயற்சித்தள்ளது.
இந்நிலையில் அச்சுவேலியை சேர்ந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொழுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸாருக்கு தொலை பேசி மூலம் தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.