யாழ்ப்பாணம் - வவுனியா தனியார் பேருந்தில் பகல் கொள்ளை..! மிகுதி பணத்தை கொடுக்க மறுத்து பயணியை துாசணத்தால் பேசி, அச்சுறுத்தி சாரதியும் நடத்துனரும் சண்டித்தனம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - வவுனியா தனியார் பேருந்தில் பகல் கொள்ளை..! மிகுதி பணத்தை கொடுக்க மறுத்து பயணியை துாசணத்தால் பேசி, அச்சுறுத்தி சாரதியும் நடத்துனரும் சண்டித்தனம்..

யாழ்ப்பாணம் - வவுனியா இடையில் பயணிகள் போக்குவரத்து செவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிக்கு மிகுதி காசு கொடுக்காமல் பயணியை துாசணத்தால் பேசி அச்சுறுத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இன்று மாலை 3.50 மணிக்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து பயணியொருவர் பயணித்துள்ளார்.

இவர் பேருந்து கட்டணமாக 260 ரூபாவுக்கு 1000 ரூபா தாளை கொடுத்துள்ளார். இதன்போது நடத்துனர் மீதிப் பணமாக 235 ரூபாவை கொடுத்துவிட்டு மீதி 500 ரூபா பின்பு தருவதாக கூறியுள்ளார். எனினும் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் 

2 மூன்று முறை மீதிப் பணத்தை கேட்ட போதும் பின்பு தருவதாக கூறியுள்ளார்.இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்பு, மீதிப் பணமாக 5 ரூபாவை கொடுத்துள்ளார். இதன்போது அப் பயணி மீதிப் பணம் 505ரூபா தர வேண்டும் என கேட்டபோது, 

அதற்கு நடத்துனர் இல்லை, 5 ரூபா தான் தர வேண்டும், நீ 500 ரூபா தான் கொடுத்தாய் என அச்சுறுத்தும் தொணியில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பயணியும் தான் 1000 ரூபாவே கொடுத்ததாகவும், மீதிப் பணம் 500 ரூபா தர வேண்டும் என கேட்டுள்ளார். 

இதற்கு சாரதியும் நடந்துனரும் இணைந்து, பயணியை அச்சுறுத்தியுள்ளார். பணத்தை தராவிட்டால் என்ன செய்வாய் ? பொலிஸாரிடம் சொல்வாயா? முடிந்தால் சொல் என அச்சுறுத்தியுள்ளனர். 

எனினும் தொடர்ச்சியாக பயணி மீதிப்பணத்தை தராவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூற, பயணியின் பேருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு மீதிப் பணத்தை கொடுத்துவிட்டு அவரை தூசன வார்த்தைகளில் பேசியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு