யாழ்.சிறாம்பியடியில் மரண சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் தவறுக்கு எமக்கு தண்டணை என மக்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறாம்பியடியில் மரண சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் தவறுக்கு எமக்கு தண்டணை என மக்கள் குற்றச்சாட்டு..

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபருடைய சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மரண சடங்கில் 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து மக்கள் கூறுகையில், 

யாழ். சிறாம்பியடியைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளை நேற்று உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் வீட்டாரிடம் வழங்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வழங்கப்பட்ட சடலம் என்பதால் 

நம்பிக்கையின் அடிப்படையில் மரண நிகழ்வுக்குச் சென்றோம்.இந்நிலையில் இறந்தவருக்குக் கொரோனா என்பதால் மரண வீட்டுக்குச் சென்ற அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினர் தற்போது கட்டாயப்படுத்துகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் தவறின் காரணமாக சடலத்தை ஏற்றி இறக்கியவர், கையாண்டவர்கள், மரண வீட்டுக்குப் போனவர்கள் என 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும்அவலம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் பவானந்தராஜா வைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, உயிரிழந்த நபர், கடந்த 4ஆம் திகதி காலை 8.45 மணிக்கு வைத்தியசாலையில் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டார். 

அந்தப் பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறுநாள் 5ஆம் திகதி பகல் அவர் உயிரிழந்து விட்டார்.மரணத்தின் பின்பும் மாதிரி பெறப்பட்டபோதும் முதல் நாள் சோதனை செய்த அடிப்படையில்

 சடலம் வழங்கப்பட்டுள்ளது என்றார். இவ்வாறு சர்ச்சைக்குள்ளான சடலம் இன்று காலை மீண்டும் யாழ். போதனாவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு