மு.க.ஸ்டாலின் அமைக்கும் புதிய அமைச்சவை!! -பெயர் பட்டியல் வெளியானது-

ஆசிரியர் - Editor II
மு.க.ஸ்டாலின் அமைக்கும் புதிய அமைச்சவை!! -பெயர் பட்டியல் வெளியானது-

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுடன் அமைச்சரவையில் 34 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மே நாளை 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. 

கொரோனா தொற்று அபாயம் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. 

மு.க.ஸ்டாலின் உள்பட 30ற்க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். 


மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:- 

துரைமுருகன்:-நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை 

கே.என்.நேரு:- நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் 

ஐ பெரியசாமி:- கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி:- உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் 

ஏ.வ.வேலு:- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் :- வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் :- வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு:- தொழில்துறை அமைச்சர்

ரகுபதி:- சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி:- வீட்டு வசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன்:- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன்:- ஊரக தொழில்துறை அமைச்சர்

எம்.பி சாமிநாதன்:- செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

கீதா ஜீவன் :- சமூக நலத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் :- மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன்:- போக்குவரத்து துறை அமைச்சர்

கே.ராமச்சந்திரன் :- வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி :- உணவுத்துறை அமைச்சர்

வி.செந்தில் பாலாஜி :- மின்சாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி :- கைத்தறித்துறை அமைச்சர்

மா.சுப்ரமணியன் :- சுகாதாரத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி :- வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் :- பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பி.கே.சேகர் பாபு :- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் :- நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

சா.மு.நாசர் :- பால் வளத்துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் :- சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி :- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சிவ.வீ.மெய்யநாதன் :- சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் :- தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மனோ தங்கராஜ்:- தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் :- சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ்:- ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்