ஜ.பி.எல் வீரர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது!! -தகவல் செல்கிறார் கங்குலி-

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் வீரர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது!! -தகவல் செல்கிறார் கங்குலி-

ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய 4 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐ.பி.எல். நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் அவசரமாக கலந்து ஆலோசித்து இந்த சீசனுக்கான அனைத்து போட்டிகiளையும் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது

52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி:- 

ஐ.பி.எல் இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல. இந்த முடிவை எடுத்தபோது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. 

ஆனால் கடந்த 3 வாரத்தில் மிகவும் உயர்ந்துவிட்டது. கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு யாரும் வெளியேறவில்லை. எனினும் பல வீரர்கள் எதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுவது கடினமானது என்றார்.


Radio