யாழ்.சாவகச்சோி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் உட்பட 162 போிடம் இன்று பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டது..!

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 162 போிடம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவதற்காக மாதிரிகள் பெறப்பட்டிருக்கின்றது.
சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றய தினம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
கொடிகாமம் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள பகுதிகளில் சுமார் 40 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில்,
இன்றைய தினம் சாவகச்சோி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், கொடிகாமம் சந்தையுடன் தொடர்புடையோர், தனிமைப்படுத்தப்பட்டிருந்தோர் உட்பட
162 போிடம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி முடிவுகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.