உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க அப்பா!! -வோர்னர் மகள் உருக்கமான வேண்டுகோள்-

ஆசிரியர் - Editor II
உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க அப்பா!! -வோர்னர் மகள் உருக்கமான வேண்டுகோள்-

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரின் மகளான இவி மே, ‘உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் கையை மீறிக்கொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வார்னரின் மகள் ‘உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவிலிருந்து யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக் கூடாது, மீறினால் சிறைத்தண்டனை கடும் அபராதம் என்று அந்நாட்டு பிரதமர் தடை உத்தரவிட்டுள்ளார். 

இந்த தடையை அடுத்து ஆவுஸ்திரேலிய வீரர்கள் மே 15 ஆம் திகதிக்கு பின்பே செல்ல முடியும். இந்நிலையில் வார்னர் மகள் இவி வரைந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். 

அதில் ‘அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து விடுங்கள், நாங்கள் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறோம்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 


Radio