போதைப்பொருள்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல் விதிப்பு
கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த நால்வரும் கைதாகிய நிலையில் அவர்களிடமிருந்து ஹெரோய்ன் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முளை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்துஇ விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸாருடன் இணைந்து சாய்ந்தமருது வேப்பையடி வீதியில் உள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு ஐஸ் போதைபொருள் வியாபாராத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன்இ அவரிடமிருந்து 330 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டனர்.
அதேவேளை இஸ்லாபாத்தைச் சேர்ந்த ஒருவரை 60 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஒருவரை 350 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவுடனும் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 1490 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்தவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மேலதிக சட்ட நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கல்முனை நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை(4) முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதே வேளை தங்கச் சங்கிலி கொள்ளைத் தொடர்பில் கல்முனை பொலிஸ் பிரிவில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தங்கச் சங்கிலி கொள்ளைகளை மோட்டார் சைக்கிளில் வருகின்ற சந்தேக நபர்கள் அறுத்து செல்வதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களின் போது பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களே இது போன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் ஏதேனும் விபரங்களை கேட்டறிவது போன்றே தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டு வருகின்றனர். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் ஏதேனும் வினவுவதுடன் பெண்கள் பதிலளிக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த மாத காலப்பகுதியில் தங்கச் சங்கிலி கொள்ளைத் தொடர்பில் 3 க்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் .