SuperTopAds

இந்தியாவில் 3 நாட்களின் பின் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் 3 நாட்களின் பின் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்திருந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், இன்று  கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. 

அந்நாட்டின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் தொற்றிலிருந்து 3 இலட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும் கவலை அளிக்கும் விடயமாக தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.