SuperTopAds

தீபிகா படுகோனே குடும்பத்தையே தொற்றிக் கொண்ட கொரோனா!!

ஆசிரியர் - Editor II
தீபிகா படுகோனே குடும்பத்தையே தொற்றிக் கொண்ட கொரோனா!!

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோனே உள்ளிட்ட அவரின் குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகை தீபிகாபடுகோனேயின் தந்தையான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஸ் படுகோனேக்குத் தொற்று ஏற்பட்டு கடந்தவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தீபிகாவின் தாய் உஜ்ஜாலா, தங்கை அனிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த குடும்பத்தினரை பார்க்க சென்ற தீபிகா படுகோனேக்கும் கொரோனா பரவியது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமது உடல் நிலைபற்றி தீபிகா படுகோன் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.