யாழ். கரவெட்டியில் முக கவசம் அணியாத 8 வர்த்தகர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..!

யாழ்.கரவெட்டி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 8 வர்த்தகர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று கரவெட்டி சுகாதார பணிமனை வைத்தியர் செந்தூரன் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நெல்லியடி வர்த்தக நிலையங்கள் பார்வையிடப்பட்டது.
இதில் 8 வர்த்தகர்கள் முறையாக முகக் கவசம் அணியாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.