யாழ்.மாநகரில் பொலிஸார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை..! முக கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறையை மீறியோருக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் பொலிஸார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை..! முக கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறையை மீறியோருக்கு எச்சரிக்கை..

யாழ்.மாநகரில் இன்றைய தினம் பொலிஸார், சுகாதார பிரிவினர் மற்றும் பிரதேச செயலர் இணைந்து சுகாதார நடைமுறைகள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்யைில் ஈடுபட்டிருந்தனர். 

யாழ்.மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்து தரிப்பிடம், முச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் ஏனைய இடங்களில் இந்த கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முகக்கவசம் அணியாதோர் 

கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு, பொது போக்குவரத்து மற்றும் வெளி மாவட்ட பேருந்து சேவையில் ஈடுபடுவோருக்கும் தற்கால சூழலில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான 

பூரண விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio