யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொரோனா கொத்தணியா..? கொடிகாமம் சந்தையில் 30 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொரோனா கொத்தணியா..? கொடிகாமம் சந்தையில் 30 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.தென்மராட்சி - கொடிகாமம் சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட ஆய்வில் 21 தொற்றாளர்களும், ஏற்கனவே 9 பேருக்குமாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

குறித்த 30 பேரும் கொடிகாமம் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் வரணி, எழுதுமட்டுவாள், கொடிகாமம், உசன், மிருசுவில், இத்தாவில், கச்சாய், நாவற்காடு, மீசாலை, பாலாவி பிரதேசங்களை சேர்ந்தவர்கள்

என தொியவந்திருக்கின்றது. இவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்பதால் கொடிகாமம் சந்தைத் தொகுதி தொடர்ந்தும் மூடப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Radio