அடுத்தடுத்து வீரர்களை தொற்றிய கொரோனா!! -ஐ.பி.எல் காலவரையின்றி ஒத்திவைப்பு-

ஆசிரியர் - Editor II
அடுத்தடுத்து வீரர்களை தொற்றிய கொரோனா!! -ஐ.பி.எல் காலவரையின்றி ஒத்திவைப்பு-

ஜ.பி.எல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் ரி-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மே 30 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப் போட்டிகளுக்கான புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Radio