பாகிஸ்தானில் கோர விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!! -13 பேர் பலி: 25 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
பாகிஸ்தானில் கோர விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!! -13 பேர் பலி: 25 பேர் காயம்-

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பணயித்த 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

அந்நாட்டின் லாகூரிலிருந்து, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹசன் அப்தல் என்ற இடத்தில் மேற்படி விபத்து நடைபெற்றுள்ளது. 

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Radio