விவாகரத்து செய்யவுள்ள பில் கேட்ஸ் தம்பதி!! -27 வருட தாம்பத்திய வாழ்விற்கு முற்றுப்புள்ளி-

ஆசிரியர் - Editor II
விவாகரத்து செய்யவுள்ள பில் கேட்ஸ் தம்பதி!! -27 வருட தாம்பத்திய வாழ்விற்கு முற்றுப்புள்ளி-

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா, 27 ஆண்டுகால தாம்பத்திய வாழ்விற்கு பின் விவாகரத்து செய்வதற்கான முடிவினை டுவிட்டரில் அறிவித்துள்ளனர். 

செல்வந்த ஜோடிகளான அவர்கள், விவாகரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்கான திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்கள் கூட்டுப் பணிகளைத் தொடரப் போவதாகக் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அந்த தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான உதவிகளை செய்து வந்துள்ளோம். 

இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.


Radio