யாழ்.மாவட்டத்தில் கொரோனா பேராபத்தை ஏற்படுத்தபோகும் கஞ்சா கடத்தல் கும்பல்கள்..! நேற்று மட்டும் கடத்திவரப்பட்ட 313 கிலோ கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பேராபத்தை ஏற்படுத்தபோகும் கஞ்சா கடத்தல் கும்பல்கள்..! நேற்று மட்டும் கடத்திவரப்பட்ட 313 கிலோ கஞ்சா மீட்பு..

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் சுமார் 313 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருக்கும் நிலையில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியா ஊடாக இலங்கையில் குறிப்பாக வடக்கு பகுதிக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அரசு எச்சரித்துள்ளதுடன் வடக்கு கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள நிலையிலும், 

பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் வடக்கு கடற்பகுதி ஊடாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றுவருகின்றது. 

நேற்றய தினம் பரத்துறை மற்றும் காங்கேசன்துறை பகுதிகளில் 218 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை பருத்துறை சுப்பர்மடம் பகுதியில் 

சுமார் 95 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வான் ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் கஞ்சாவை மீட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் யாழ்.மாவட்டத்தில் 313 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

Radio