கொரோனா 2 ஆவது அலையால் 70 இலட்சம் பேர் வேலை இழப்பு!! -இந்தியாவில் தொடரும் அவலம்-
இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலை தாக்கத்தை அடுத்து பல பகுதிகளில் அமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமார் 70 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டு பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் அந்நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்சினை மார்ச் மாதத்தில் 6.5 வீதத்திலிருந்து 7.97 வீதமாக அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக புதிய வேலைவாய்ப்புக்கள் குறைந்து வருகின்றன. மே மாதத்தில் இந்த நிலை மேலும் மோசமாகி வேலையின்மை வீதம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.