பொலிஸார் என கூறி வீட்டுக்குள் நுழைந்து சோதனையிடுவதாக பாசாங்கு செய்து 30 பவுண் நகைகள் கொள்ளை..! இரு வீடுகளில் துணிகர சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸார் என கூறி வீட்டுக்குள் நுழைந்து சோதனையிடுவதாக பாசாங்கு செய்து 30 பவுண் நகைகள் கொள்ளை..! இரு வீடுகளில் துணிகர சம்பவம்..

பொலிஸார் என கூறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் இரு வீடுகளில் சுமார் 30 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்ற சம்பவம் வவுனியா தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியா நகர்பகுதி மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் இன்று இடம்பெற்றிருக்கின்றது. குறித்த வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள், தங்களை பொலிசார் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வதுபோல பாசாங்கு செய்துவிட்டு இருவீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 

பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Radio