முதல் போட்டியிலேயே சுழல் மாயாஜாலம்!! -இலங்கையின் இளம் சுழல் பந்து வீச்சாளரான பிரவீனின் புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
முதல் போட்டியிலேயே சுழல் மாயாஜாலம்!! -இலங்கையின் இளம் சுழல் பந்து வீச்சாளரான பிரவீனின் புதிய சாதனை-

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 16 ஆவது சர்வதேச வீரராகவும் முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

145 வருட டெஸ்ட் வரலாற்றில் 16 வீரர்களே அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்கள் அல்லது 10 விக்கெட்டுக்களுக்கும் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். 

கண்டி பல்லேகலையில் நடைபெற்ற பங்களாதேஸ் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட இளம் இடது கை சுழல் பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், 2 ஆவது இன்னிங்ஸ்ஸில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் வீத்தியுள்ளார்.

மொத்தமாக 11 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், இந்தப் பட்டியலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வீரர் ஒருவர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Radio