ஜ.பி.எல் தொடருக்கு ஆப்பு வைத்த கொரோனா!! -இதுவரை 5 வீரர்களுக்கு தொற்று உறுதி: போட்டியும் ஒத்திவைப்பு-

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் தொடருக்கு ஆப்பு வைத்த கொரோனா!! -இதுவரை 5 வீரர்களுக்கு தொற்று உறுதி: போட்டியும் ஒத்திவைப்பு-

கொல்கத்தா அணியின் இரு வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருந்தன. 

இந்நிலையில் கொல்கத்தா அணியின் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியைச் சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. 

சென்னை அணியின்  தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Radio