டோலிவுட் இயக்குனருடன் இணையும் இளையதளபதி!!

ஆசிரியர் - Editor II
டோலிவுட் இயக்குனருடன் இணையும் இளையதளபதி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் இளைதளபதி “தளபதி 65” படத்திற்க பின் பிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இளையதளபதி விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. 

இந்நிலையில் இளையதளபதி விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

அண்மையில் இயக்குனர் வம்சி சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், இந்தக் கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் முழு கதை வசனத்தையும் தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது. 


Radio