தமிழக தேர்தலில் மண் கௌவ்விய சினிமா பிரபலங்கள்!!

ஆசிரியர் - Editor II
தமிழக தேர்தலில் மண் கௌவ்விய சினிமா பிரபலங்கள்!!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் போட்டியிட்ட போதும் இருவரை தவிர ஏனையவர்கள் அனைவரும் படு தேல்வியை சந்தித்துள்ளனர்.

அவர்களின் உதயநிதி ஸ்டாலினை தவிர அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு 32,462 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 39,588 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தொற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, 53,488 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், 57,412 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், வெறும் 428 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.


Radio