தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்!! -வீதியில் நின்ற சிறுவயது நண்பனையும் கட்டித்தளுவினார்-

ஆசிரியர் - Editor II
தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்!! -வீதியில் நின்ற சிறுவயது நண்பனையும் கட்டித்தளுவினார்-

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில்தான் வசித்து வந்தார். அங்கு தற்போது அவரது மனைவி தயாளு அம்மாள் உள்ளார்.

அவரை இன்று மனைவி துர்காவுடன் சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். தாயிடம் ஆசி பெற்றுவிட்டு திரும்பிய மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார். 

சிறு வயதில் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் தெருக்களில் விளையாடியவர். இதனை நினைவுகூரும் வகையில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த பால்யகால நண்பர் ஒருவரையும் அவர் சந்தித்து பேசியிருந்தார்.


Radio