அறிதிப் பெரும்பான்மையுடன் தி.மு.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது!! -முதலமைச்சராக ஸ்டாலின் 7ஆம் திகதி பதவி ஏற்கிறார்-
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களைப் பிடித்து தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. அதிலும் தி.மு.க. மட்டும் 127 இடங்கiளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இதன் மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை செவ்வாய்க் கிழமை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
அனேகமாக வருகிற 7 ஆம் திகதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிகிறது.