ஆற்றில் ஒன்றுடன் ஒன்று மோதிய படகுகள்!! -விபத்து: 25 பேர் பரிதாப பலி-

ஆசிரியர் - Editor II
ஆற்றில் ஒன்றுடன் ஒன்று மோதிய படகுகள்!! -விபத்து: 25 பேர் பரிதாப பலி-

பங்களாதேஸ் நாட்டின் பத்மா பகுதியில் உள்ள ஆற்றில் இன்று திங்கட்கிழமை காலை 2 படகுகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பலியாகினர். 

வேகப் படகொன்று மற்றொரு படகுடன் மோதி இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மடரிபூர் மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மிராஜ் ஹொசைன் தெரிவித்துள்ளார். 

சம்பவத்தை அடுத்து களமிறங்கிய மீட்புப் படையினர் இறந்தவர்களின் 26 சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும் சிலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Radio