குடியேற்றவாசிகளின் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது!! -மூவர் பலி: சான் டியாகோ கடற்கரையில் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
குடியேற்றவாசிகளின் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது!! -மூவர் பலி: சான் டியாகோ கடற்கரையில் சம்பவம்-

கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ கடலில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இவ்விபத்தில் படகில் பயணித்த 20ற்க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்தவர்களுடன் பயணம் செய்த இந்தப் படகு பாறை ஒன்றுடன் மோதி உடைந்து அதிலிருந்த 30 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். 

சம்பவத்தை அறிந்து ஹெலிகப்டரில் விரைந்த மீட்புக் குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்டனர். எனினும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 


Radio