யாழ்.மீசாலை - வேம்பிராயில் அம்புலன்ஸ் வருவதை கண்டு தலைதெறிக்க ஓடிய மக்கள்..! பீ.சி.ஆர் பீதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலை - வேம்பிராயில் அம்புலன்ஸ் வருவதை கண்டு தலைதெறிக்க ஓடிய மக்கள்..! பீ.சி.ஆர் பீதி..

யாழ்.மீசாலை - வேம்பிராய் பகுதியில் உள்ள கலட்டி பிள்ளையார் கோவில் தேர் திருவிழாவில் கலந்துகொண்ட பக்கதர்கள் அம்புலன்ஸ் வண்டி வருவதை கண்டு தலைதெறிக்க ஓடிய சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. 

கலட்டி பிள்ளையார் கோவில் தேர் திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மக்களை கலைந்து போகுமாறு கேட்டுள்ளனர். எனினும் பக்தர்கள் அதற்று மறுத்துள்ளனர். 

பின்னர் பொலிஸார் மிகுந்த சிரமத்தின் மத்தியில் 50 பேருடன் தேரை இழுத்து திருவிழாவை நிறைவு செய்யுமாறு கூறிவிட்டு பொலிஸார் சென்றுவிட்டனர். பொலிஸார் சென்றதன் பின்னர் பக்தர்கள் மீளவும் கூடிய நிலையில் அம்புலன்ஸ் வருகை தந்துள்ளது

இதையடுத்து அடுத்து பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள பொலிஸாரே வருகின்றனர். என்று கருதி பக்தர்கள் ஓடியுள்ளனர். அதன் பின்னர் 50 பக்தர்களுடன் தேர் இருப்பிடத்துக்கு கொண்டுவரப்பட்டு தேர்த்திருவிழா நிறைசெய்யப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு