யாழ்.மாவட்டத்தில் காப்புறுதி நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி மோசடி..! பல வர்த்தகர்கள் பணத்தை இழந்தனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் காப்புறுதி நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி மோசடி..! பல வர்த்தகர்கள் பணத்தை இழந்தனர்..

யாழ்.மாவட்டத்தில் காப்புறுதி நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி வர்த்தகர்களிடம் பணம் மோசடி செய்யும் கும்பல் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்றபோது அதற்காக செய்யப்பட்ட காப்புறுதி விபரத்தினை வைத்து அந்த காப்புறுதியை தொடரலாம் எனவும் அதற்காக மாதாந்தம் பணம் செலுத்தவேண்டும் எனவும், 

அல்லது காப்புறுதி பணத்தை எடுப்பதற்கு ஒரு தடவையில் ஒரு தொகை பணத்தை செலுத்தி காப்புறுதி பணத்தை எடுத்துக் கொள்ளலாம். எனவும் மோசடி கும்பல் கூறுவதுடன், 

25 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரம் வரை அதற்காக பணத்தை கேட்பதுடன் பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளமை அண்மைய நாட்களில் அம்பலமாகியிருக்கின்றது. 

மேலும் ஒரு தடவையில் பணத்தை செலுத்தி கப்புறுதியை முடித்துக் கொண்டு காப்புறுதி பணத்தை பெற விரும்பும் வர்த்தகர்களிடம் தனியார் வங்கி ஒன்றின் கணக்கு இலக்கம் வழங்கப்பட்டு

அந்த இலக்கத்திற்கு பணத்தை வைப்பு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கணக்கு இலக்கம் கொழும்பில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றினுடையது என அறியப்பட்டுள்ளது. 

மேலும் வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் மோசடி பேர்வழிகள் பெயர், கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கி கடன்பெற்ற காலம் என்பவற்றை சரியாக குறித்து

சிட்டை அனுப்புவதால் பல வர்த்தகர்கள் நம்பி பணத்தை வைப்பிட்டுள்ளதாக தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு