பொல்லார்டு அதிரடி ஆட்டம்!! -கடைசிப் பந்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்ற மும்பை-

ஆசிரியர் - Editor II
பொல்லார்டு அதிரடி ஆட்டம்!! -கடைசிப் பந்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்ற மும்பை-

சி.எஸ்.கே அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நடந்த போட்டியில் நாணயசுழல்ச்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களை குவித்தது. ராயுடு ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும், டூபிளசிஸ் 50 ஓட்டங்களையும், மொயின் 58 ஓட்டங்களையும் பெற்றனர். 

மும்பை அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய பொல்லார்டு சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினார். 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

மும்பை அணி வெற்றி பெற்ற போதிலும் சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு