SuperTopAds

பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் சுகாதார நடைமுறையை மீறிய உணவகம் முடக்கப்பட்டது..! 5 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் சுகாதார நடைமுறையை மீறிய உணவகம் முடக்கப்பட்டது..! 5 பேர் கைது..

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் உணவகம் ஒன்று முடக்கப்பட்டுள்ளதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவகமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்ப்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்கும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக 

விளக்கமளிப்பதற்காகவும் சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருமாறு கடந்த இரு தினங்களிற்கு முன்பாக பணிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த உணவகத்தில் பணிபுரியும் சிலர் சுகாதாரவைத்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது. 

இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை முன்னெடுக்கச் சென்ற சுகாதார பரிசோதகர்களுடன் குறித்த உணவகத்தின் ஊழியர்கள் சிலர் முரண்பட்டிருந்தனர். 

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து ஐந்து பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.