SuperTopAds

வைத்தியசாலையில் ஒட்சிஜன் காலியானது!! -தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வைத்தியர் உட்பட 8 பேர் பரிதாப உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலையில் ஒட்சிஜன் காலியானது!! -தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வைத்தியர் உட்பட 8 பேர் பரிதாப உயிரிழப்பு-

டெல்லி பத்ரா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை ஒட்சிஜன் முடிவடைந்ததால், தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு வைத்தியர் உள்ளிட்ட 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை தரப்பில் மேல் நீதிமன்றத்தில்:- உரிய நேரத்தில் எமக்கு ஒட்சிஜன் கிடைக்கவில்லை. மதியம் 12 மணிக்கு ஒட்சிஜன் முடிந்தது. அதன்பின்னர் 1.35 மணிக்கு ஒட்சிஜன் கிடைத்தது. 

இதனால் எமது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உள்பட 8 பேரை இழந்துவிட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. 

குறித்த வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்குள் 2 ஆவது முறையாக ஒட்சிஜன் முடிவடைந்துள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதியும் இதேபோன்று ஒட்சிஜன் தீர்ந்துபோனது. ஆனால், ஓரிரு நிமிடங்களுக்குள் மீண்டும் ஒட்சிஜன் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.