நோன்பு துறந்த சிறிது நேரத்தில் பாரிய குண்டுவெடிப்பு!! -30 பேர் மரணம்: 70 பேர் காயம்-
ஆப்கானிஸ்தானில் ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் நடந்த பாரிய குண்டு வெடிப்பில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் வைத்தியசாலை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்தனர்.
இதன்பின்னர் 6.50 மணியளவில் வைத்தியசாலைக்கு வெளியே திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. இச் சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 70 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.