SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்..! 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், வங்கி ஊழியர் உட்பட 29 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்..! 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், வங்கி ஊழியர் உட்பட 29 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடக்கில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் 644 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 36 பேருக்கு வடக்கில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. 

அவர்களில் 8 பேர் யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள், மேலும் தனியார், அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் வங்கி ஊழியர் ஒருவர் மற்றும் விடுதி பணியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. 

மேலும் 3 பேர் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கு தொற்று உறுதியானது, ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர், மின்சாரசபை ஊழியர் ஒருவர், 

பிஸ்கட் நிறுவனம் ஒன்றின் விநியோகஸ்த்தர்கள் இருவர், தெல்லிப்பழை 3 பேர் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று அவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 

யாழ்.போதனா வைத்தியசாலை 2 தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.