SuperTopAds

உயிர்களை பாதுகாக்க ஒத்துழைப்பு தாருங்கள்..! சைவ சமய தலைவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
உயிர்களை பாதுகாக்க ஒத்துழைப்பு தாருங்கள்..! சைவ சமய தலைவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை..

ஆலயங்களில் சகல வழிபாடுகள் மற்றும் விழாக்களை ஒத்திவைத்து உயிர்களை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குங்கள். என நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். 

நல்லை அதீன முதல்வர் மற்றும் அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர், தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய தலைவர், கோப்பாய் சுப்பிரமணிய கேட்டத்தின் தலைவர் ரஷி ஆகியோர் இணைந்து இன்று மாலை ஊடகங்களை சந்தித்தபோதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மேலும் கூறுகையில், பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனா என்னும் கொடிய தொற்றுநோய் தாண்டவமாடுகின்றது. பாரத தேசத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து வீழ்ந்து இறப்தை நான் காண்கின்றோம்.

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன் பெற நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை செய்யுங்கள்.ஆலயங்களில் நாளாந்த பூசை, நித்திய நைமித்திய வழிபாடுகளைச் செய்யுங்கள். 

அடியவர்கள் ஆலயங்களில் கூடுவதைத் தவிருங்கள்.பொதுமக்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதை இயன்றவரை கட்டுப்படுத்துங்கள்.சுகாதார மருத்துவ சமூகத்தின் வேண்டுதலுக்கு அனைவரும் மதிப்பளித்து பாதுகாப்பாகச் செயற்படுங்கள்.

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள்.பாரத தேசத்தில் மக்கள்படும் அவலம் ஓயவேண்டும்படி அனைவரும் வீடுகளில் பிராத்தனை செய்யுங்கள்.தெருக்களில் கூடுவதையோ தெருவோர வியாபாரம் செய்வதையோ 

சுகாதாரத்துக்கு இடையூறாக நடப்பதையோ அனைவரும் தவிருங்கள் என்றுள்ளது.