அரசின் இடமாற்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் மாவட்ட செயலர்கள்..! பின்னணியில் உள்ளது யார்?

ஆசிரியர் - Editor I
அரசின் இடமாற்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் மாவட்ட செயலர்கள்..! பின்னணியில் உள்ளது யார்?

அரசினால் வழங்கப்பட்டுள்ள இடமாற்ற அறிவிப்பினை மாவட்ட செயலர்கள் நடைமுறைப்படுத்த மறுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளரை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கும், 

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரை பூநகரி பிரதேச செயலகத்திற்கும் இடம் மாற்றம் செய்வது தொடர்பில் அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த இடமாற்றம் தொடர்பில் மேற்குறித்த பிரதேச செயலாளர்களால் மீள் பரிசீலணைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தபோதிலும், 

கடந்த 08.02.2021 அன்று குறித்த இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்தமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அரசசேவைகள், மாகாண சபைகள் 

மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரடணசிறியினால் குறித்த மீள் பரிசீலணை கோரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்.

அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும் குறித்த இடமாற்றத்தினை மாவட்ட அரசாங்க அதிபர்கள் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர்களிடம் வினவியபோதிலும் அவர்கள் காரணங்களை வெளிப்படுத்தவில்லை. 

அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், நிறுவன தலமை அதிகாரி உள்ளிட்டோருக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 

அவை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த இடமாற்றம் தொடர்பில் அரசியல் காரணங்கள் காணப்படுவதாகவும், அரசியல் தலையீட்டின் மத்தியிலேயே அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை எனவும் 

அரச ஊழியர்கள் மத்தியில் கருத்து நிலலுவதுடன், குறித்த இடமாற்றத்தை தவிர்க்கம் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர்கள் பின்னடிப்பது தொடர்பில் பொதுமக்களும் சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர். 

அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுநிருபங்கள், அறிவித்தல்களை நடைமுறைப்படுத்தாத அரசாங்க அதிபர்கள் தொடர்பில் 

மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.அவ்வப்போது பொதுமக்கள் நலன்சார்ந்த அறிவித்தல்களை அரசாங்கம் வெளியிடுகின்றபோதிலும், 

அதனை இவ்வாறு அலட்சியமாக நோக்குகின்றனரா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இடமாற்ற அறிவிப்பு தொடர்பில் இடமாற்றத்திற்குரிய அரச அதிகாரிகளின் மீள் பரிசீலணை கடிதம் நிராகரிக்கப்பட்டு 

உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அமைச்சு அறிவித்துள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவதற்கு அரச அதிபர்கள் பின்னடிக்க காரணம்

அமைச்சர் ஒருவரே எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு