மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!! -அஞ்சலிலுக்கு முழு தடை-
இந்திய தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை 3 மணியளவில் தனது 54 ஆவது வயதில் உயிரிழந்தார்.
அவரின் உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பின், இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி ஆகி உள்ளது. கொரோனா தொற்று இருந்ததால், வீட்டில் 5 நிமிடங்களுக்கு மட்டும் கே.வி.ஆனந்தின் உடல் வைக்கப்பட்டது.
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை மியாட் வைத்தியசாலையில் இருந்து உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.