கொரோனா பரவல் தொடர்பில் நிந்தவூர் மக்களுக்கு அறிவித்தல்
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது வேலைகளை சகலரும் மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் எமது தலைவரின் விடுதலைக்காக அடையாள போராட்டத்தை மேற்கொள்கின்றவர்கள் கொரோனா சுகாதார முறைகளை பின்பற்றி இச்செயற்பாட்டினை முன்னெடுங்கள் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை நிறைவடைந்த பின்னர் இரவு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
எமது பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக பொருள் கொள்வனவில் ஈடுபடுகின்ற முஸ்லீம் மக்களுக்கும் வினயமான விடயத்தை நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.ஏனெனில் கொரோனா 3 அலை ஒன்று உருவாகியுள்ளது.இந்த நாட்டின் சட்டங்களை மதிப்பவர்கள் என்ற வகையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் தெளிவு படுத்தும் கடமை உள்ளது.எனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது வேலைகளை சகலரும் மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் எமது தலைவரின் விடுதலைக்காக அடையாள போராட்டத்தை மேற்கொள்கின்றவர்கள் கொரோனா சுகாதார முறைகளை பின்பற்றி இச்செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.