SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு சந்தை கொத்தணி உருவாகும் அபாயம்..! கொடிகாமம் சந்தையில் 4 பேர், பயிற்சி ஆசிரியர், பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட 14 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு சந்தை கொத்தணி உருவாகும் அபாயம்..! கொடிகாமம் சந்தையில் 4 பேர், பயிற்சி ஆசிரியர், பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட 14 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் 760 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்தக் கொள்ளப்பட்ட நிலையில் வடமாகாணத்தில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தில் கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில்

நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் கோப்பாய் சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். மற்றொருவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை

ஆசிரிய பயிற்சியாளரவார். அவர் திருகோணமலையை சேர்ந்தவராவார். மேலும் நல்லுர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களாவர். 

சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை மாணவன் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் இருவருக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும் 

முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்கும் என நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.