திருமண மண்டபங்கள், திரையங்குகள் திறக்க நிபந்தனையுடன் அனுமதி..! நிபந்தனைகள் என்ன? ஆளுநர் தலமையிலான கலந்துரையாடலில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
திருமண மண்டபங்கள், திரையங்குகள் திறக்க நிபந்தனையுடன் அனுமதி..! நிபந்தனைகள் என்ன? ஆளுநர் தலமையிலான கலந்துரையாடலில் தீர்மானம்..

யாழ்.மாவட்டத்தில் 150 பேருடன் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், திரையரங்குகளை 25 வீதமான பார்வையாளர்களுடன் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. 

வடமாகாண ஆளுநர் திருமத்தி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் வடமாகாணத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி திருமண மண்டபங்களில் 150 பேருடன் திருமண நிகழ்வுகளை நடாத்தலாம். எனினும் பொலிஸார், சுகாதார பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதன்போது சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் வெளிமாவட்டத்தவர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது. மேலும் வணக்கஸ்தலங்களில் நிகழ்வுகளை உள்ளேயே நடத்தவேண்டும். அதற்று மத தலைவர்கள், உபயகாரர்கள், பரிபாலன சபையினர் பொறுப்பாளிகள் ஆவர். 

மத தலங்களுக்கு வெளியே நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு